Guinea Fowl Gravy


0
0.0 rating


அசைவம் என்றால் சிக்கன் மட்டன் மீன் மட்டுமே நினைவுக்கு வரும் நமக்கு சுவையான வேறொரு அசைவ உணவை பார்க்கலாம் அதுதான் கிண்ணி கோழி கிரேவி

கின்னிக்கோழி கிரேவி (Guinea Fowl Gravy)

  • தேவையானபொருட்கள்
  • கின்னி கோழி கறி- அரைக்கிலோ
  • சிவப்பு மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
  • மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  • சிக்கன் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  • மஞ்சள்தூள் அரைக்கரண்டி
  • பெரிய வெங்காயம்-
  • தக்காளி-2
  • பட்டை,லவங்கம், ஏலக்காய் தேவையான அளவு
  • கருவேப்பிலை கொத்தமல்லி பச்சைமிளகாய்- 3 எண்ணெய் -6 ஸ்பூன் மிளகாய் தூள்-ஒரு ஸ்பூன்
  • மிளகுத்தூள்-ஒரு ஸ்பூன்
  • பெருஞ்சீரகம்-அரை ஸ்பூன்

செய்முறை:

சுத்தம் செய்த கிண்ணி கோழியை ஒரு பாத்திரத்தில் போடவும் அதில் மஞ்சள் தூள் சிறிது இஞ்சி பூண்டு சிறிது சேர்க்கவும் பிறகு 2 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும் பிறகு குக்கரில் வைக்கவும் அடுப்பை பற்ற வைத்து 4 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும், பிறகு சட்டியை அடுப்பில் வைக்கவும் சூடானதும் 6 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும், இலவங்கம் ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் நன்கு வதங்கிய பிறகு குக்கரில் இருக்கும் கின்னி கோழி கோழிக்கறியை அதில் போடவும் அதனுடன் கறி வேகவைத்த தண்ணீரை ஊற்றவும் பிறகு மிளகாய்த்தூள் சிக்கன் மசாலா தூள் மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி மூடி வைக்கவும் பிறகு மிளகுதூள் பெருஞ்சீரகம் சேர்க்கவும் நன்கு சுண்டியதும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் கின்னிக்கோழி கிரேவி தயார்

Guinea Fowl Gravy

Write a Review / Comment

Recent Reviews / Comments

There are no reviews yet. Be the first one to write one.

Trending Posts