
சுரைக்காய் பொரியல் (Bottle Gourd Fry)
தேவையான பொருட்கள்:
- சுரைக்காய்- 1/2 kg
- வறுத்த வேர்க்கடலை- 50g,
- கடுகு- 1 ஸ்பூன், மஞ்சள் பொடி- 1/2 ஸ்பூன்,
- மல்லாட்டை எண்ணெய்- 3 ஸ்பூன், கருவேப்பிலை தேவையானளவு,
- உப்பு தேவையான அளவு,
- காய்ந்த மிளகாய்-3.
செய்முறை:
தோல் சீவிய சுரைக்காயை பொடியாக வெட்டி கொள்ளவும் (பிஞ்சு சுரைக்காய் ஆக இருந்தால் தோல் நீக்க வேண்டிய அவசியம் இல்லை) அடுப்பை பற்ற வைத்து அதன்மீது கடாயை வைக்கவும், அதில் 3 ஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்றவும், அதில் கடுகை போட்டு கொள்ளவும், பொரிந்ததும் வெட்டிய சுரைக்காய் துண்டுகளை சேர்த்து விடவும், அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கிளறி மூடவும்.
அது வெந்து கொண்டிருக்கும் நேரத்தில், தோல் நீக்கிய வேர்க்கடலை அதனுடன் 3 காய்ந்த மிளகாயை சேர்த்து மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
சுரைக்காய் வெந்தவுடன் அதில் பவுடர் ஆக்கிய வேர்க்கடலையை கொட்டி நன்கு கிளறவும், இறுதியாக கருவேப்பிலையை சேர்த்து இறக்கிவிடவும் சுவையான சுரைக்காய் பொரியல் தயார்.

பூசணிக்காய் அல்வா(Poosanikai halwa)
தேவையான பொருட்கள்:
- வெள்ளை பூசணிக்காய்-1/2 kg
- சர்க்கரை- 1/4 kg,
- கேசரிப் பவுடர்- ஒரு ஸ்பூன்,
- ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்,
- முந்திரி- 100g
- நெய் -200 g
செய்முறை;
வெள்ளை பூசணிக்காய் தோல் நீக்கி காய்கறி சீவும் சீவலில் நன்கு சீவிக் கொள்ளவும், பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து பற்ற வைக்கவும் அதில் சீவிய பூசணிக்காயை போட்டு மூடவும், பத்து நிமிடம் கழித்து திறந்து நன்கு கிளறவும், பூசணிக்காயில் இருந்து தண்ணீர் வெளியேறி இருக்கும் அந்த தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும், வெந்தவுடன் அதோடு கால் கிலோ சர்க்கரையை முழுதாக சேர்த்து விடவும், அதனுடன் கேசரி பவுடரையும் சேர்த்து கொள்ளவும், அடிப்பிடிக்காமல் கிண்டி கொண்டே இருக்கவும், கட்டியான பதம் வந்த பிறகு, நெய்யில் பொரித்து வைத்த முந்திரியை அதனுடன் சேர்த்து நெய்யையும் ஊற்றி அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும் பதம் வந்தவுடன் ஏலக்காய் பொடியை சேர்த்து இறக்கிக் கொள்ளவும் வேறொரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் மாற்றிக் கொள்ளவும், பூசணிக்காய் அல்வா தயார்..

Guinea Fowl Gravy
அசைவம் என்றால் சிக்கன் மட்டன் மீன் மட்டுமே நினைவுக்கு வரும் நமக்கு சுவையான வேறொரு அசைவ உணவை பார்க்கலாம் அதுதான் கிண்ணி கோழி கிரேவி
கின்னிக்கோழி கிரேவி (Guinea Fowl Gravy)
- தேவையானபொருட்கள்
- கின்னி கோழி கறி- அரைக்கிலோ
- சிவப்பு மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
- மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
- சிக்கன் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
- மஞ்சள்தூள் அரைக்கரண்டி
- பெரிய வெங்காயம்-
- தக்காளி-2
- பட்டை,லவங்கம், ஏலக்காய் தேவையான அளவு
- கருவேப்பிலை கொத்தமல்லி பச்சைமிளகாய்- 3 எண்ணெய் -6 ஸ்பூன் மிளகாய் தூள்-ஒரு ஸ்பூன்
- மிளகுத்தூள்-ஒரு ஸ்பூன்
- பெருஞ்சீரகம்-அரை ஸ்பூன்
செய்முறை:
சுத்தம் செய்த கிண்ணி கோழியை ஒரு பாத்திரத்தில் போடவும் அதில் மஞ்சள் தூள் சிறிது இஞ்சி பூண்டு சிறிது சேர்க்கவும் பிறகு 2 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும் பிறகு குக்கரில் வைக்கவும் அடுப்பை பற்ற வைத்து 4 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும், பிறகு சட்டியை அடுப்பில் வைக்கவும் சூடானதும் 6 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும், இலவங்கம் ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் நன்கு வதங்கிய பிறகு குக்கரில் இருக்கும் கின்னி கோழி கோழிக்கறியை அதில் போடவும் அதனுடன் கறி வேகவைத்த தண்ணீரை ஊற்றவும் பிறகு மிளகாய்த்தூள் சிக்கன் மசாலா தூள் மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி மூடி வைக்கவும் பிறகு மிளகுதூள் பெருஞ்சீரகம் சேர்க்கவும் நன்கு சுண்டியதும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் கின்னிக்கோழி கிரேவி தயார்