பூசணிக்காய் அல்வா(Poosanikai halwa)


0
0.0 rating


தேவையான பொருட்கள்:

  • வெள்ளை பூசணிக்காய்-1/2 kg
  • சர்க்கரை- 1/4 kg,
  • கேசரிப் பவுடர்- ஒரு ஸ்பூன்,
  • ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்,
  • முந்திரி- 100g
  • நெய் -200 g

செய்முறை;

வெள்ளை பூசணிக்காய் தோல் நீக்கி காய்கறி சீவும் சீவலில் நன்கு சீவிக் கொள்ளவும், பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து பற்ற வைக்கவும் அதில் சீவிய பூசணிக்காயை போட்டு மூடவும், பத்து நிமிடம் கழித்து திறந்து நன்கு கிளறவும், பூசணிக்காயில் இருந்து தண்ணீர் வெளியேறி இருக்கும் அந்த தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும், வெந்தவுடன் அதோடு கால் கிலோ சர்க்கரையை முழுதாக சேர்த்து விடவும், அதனுடன் கேசரி பவுடரையும் சேர்த்து கொள்ளவும், அடிப்பிடிக்காமல் கிண்டி கொண்டே இருக்கவும், கட்டியான பதம் வந்த பிறகு, நெய்யில் பொரித்து வைத்த முந்திரியை அதனுடன் சேர்த்து நெய்யையும் ஊற்றி அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும் பதம் வந்தவுடன் ஏலக்காய் பொடியை சேர்த்து இறக்கிக் கொள்ளவும் வேறொரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் மாற்றிக் கொள்ளவும், பூசணிக்காய் அல்வா தயார்..

Write a Review / Comment

Recent Reviews / Comments

There are no reviews yet. Be the first one to write one.

Trending Posts