சுரைக்காய் பொரியல் (Bottle Gourd Fry)


0
0.0 rating


தேவையான பொருட்கள்:

  • சுரைக்காய்- 1/2 kg
  • வறுத்த வேர்க்கடலை- 50g,
  • கடுகு- 1 ஸ்பூன், மஞ்சள் பொடி- 1/2 ஸ்பூன்,
  • மல்லாட்டை எண்ணெய்- 3 ஸ்பூன், கருவேப்பிலை தேவையானளவு,
  • உப்பு தேவையான அளவு,
  • காய்ந்த மிளகாய்-3.

செய்முறை:

தோல் சீவிய சுரைக்காயை பொடியாக வெட்டி கொள்ளவும் (பிஞ்சு சுரைக்காய் ஆக இருந்தால் தோல் நீக்க வேண்டிய அவசியம் இல்லை) அடுப்பை பற்ற வைத்து அதன்மீது கடாயை வைக்கவும், அதில் 3 ஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்றவும், அதில் கடுகை போட்டு கொள்ளவும், பொரிந்ததும் வெட்டிய சுரைக்காய் துண்டுகளை சேர்த்து விடவும், அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கிளறி மூடவும்.

அது வெந்து கொண்டிருக்கும் நேரத்தில், தோல் நீக்கிய வேர்க்கடலை அதனுடன் 3 காய்ந்த மிளகாயை சேர்த்து மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

சுரைக்காய் வெந்தவுடன் அதில் பவுடர் ஆக்கிய வேர்க்கடலையை கொட்டி நன்கு கிளறவும், இறுதியாக கருவேப்பிலையை சேர்த்து இறக்கிவிடவும் சுவையான சுரைக்காய் பொரியல் தயார்.

Write a Review / Comment

Recent Reviews / Comments

There are no reviews yet. Be the first one to write one.

Trending Posts